பகுத்தறிவு
கையில் விளங்குகள் இல்லை
ஆனால்
நீ கட்ட பட்டிருக்கிறாய்
கோடரி கொண்டு உடைக்காதே
மதிகொண்டு
அவிழ்த்துவிடு
அதற்க்கு
கையில் விளங்கு இருப்பதை
முதலில் நீ உணர வேண்டும்
ஜாதி மதம்
அத்தனையும் கால் செருப்பாய்
கலட்டி விடு
பகுத்தறிவை கையில் எடு
புத்தகத்தை புரட்டு
அமைதியாய் இரு
உனக்கான நேரம் வரும்
அதிகமாய் கேள்வி கேள்
மாற்று கருத்து இல்லாத கேள்விகளாய்
இருக்கவேண்டும் அதை
தேடி தேடித்தான் கேட்டார் ராமசாமி
நம் தந்தை பெரியார் .