அன்பு தோழிக்கு !!

அன்பு தோழிக்கு !
கால சக்கரம் மிக வேகமாய் சுழல்கிறது!
பிறப்பு- இறப்பு என்ற இடைவெளியில்
வருடங்களோடு சேர்த்து நமக்கும் வயதாகிற்று !
கனவு ,மாயை, பொய்
என உருண்டோடும் இந்த வாழ்க்கை,
நல்ல நண்பர்களை காட்டியது மட்டும் உண்மை !
சிரித்து மகிழ்ந்த நினைவுகள் அனைத்தும்
என்றென்றும் நம் நட்பை பலப்படுத்தும்!


11.10.2010 தொடங்கி இன்று வரை ,.,.,.


அன்று தமிழ் பேசும் தலைகள் என்று
நம்மவர் அணியில் நாம் ஐவர்.

அறிமுகம் நினைவில்லை!
உன் - அன்பெனும் சிறையில்
எப்போது ஆயுள் கைதி ஆனேன் என்று தெரியவில்லை !

முதல் வேலை !
முதல் சம்பளம் !
என அனைத்து தருணங்களும் இனித்தாலும் .,.,
நீ lunchku கொண்டு வரும்
grand sweets சுவைக்கு எதுவும் ஈடாகாது !!:-)

கால பெருவெளியில்
இனி நீ சந்திக்கவிருக்கும் அனைவரும்
உன் வழிகாட்டிகள் !!
வாய்ப்புகளை பயன்படுத்தி- உன்
அறிவுக்கு உணவிடு ,.,.,
கொஞ்சமாய் வயிற்றிக்கும் .

போட்டி உலகமிது !
ஒரு கணம் கூட நினைவுகளை
பின்னோக்கி செலுத்தாதே!
அடுத்த விநாடி ஒளித்துவைத்திருக்கும்
ஆச்சர்யம் ஏராளம். . .
எப்போதும் உனது எண்ணம்-செயல்
இவை இரண்டும்
Rail track போல சேர்ந்தே இருக்கட்டும்!.

உன் வாழ்வில் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற,
என் வாழ்த்துக்கள்!

இது முடிவல்ல !
பிரிவு மட்டும் தான் என்றாலும் ....
இந்த கணம் கனக்கிறது.
புரியாத வலி ஒன்று
மனதை வாட்டி,
வியர்க்கிறது...
விழி ஓரத்தில்!

பாதைகள் வேறு..
பயணங்கள் வேறானாலும்...,
என்னோடு இருக்கும் உனது
Facebook account um
Mobile number um
என்றும் மாறாமல் இருக்கட்டும்.

நட்புடன் .
கணேஷ்.

எழுதியவர் : Ganesanarasimman (10-May-12, 9:34 pm)
பார்வை : 695

மேலே