இனிய நட்பு
நண்பா!!
அதிகாலையில் கண்ட கனவு பலிக்குமாம்....
அதற்க்காகவே கனவு காண்கிறேன்
என்னுடன் நீ!!!
என்ன விசித்திரம்???
உன்னை பற்றி நினைக்காத நேரங்களிலும்
இதயம் துடிக்கிறது!!!
என் இதயத்தில் நீ...
என்று சொல்லத்தான் விரும்புகிறேன்
இருந்தும் சிறு தயக்கம்...
என் இதயமே உன்னுடயதல்லவா!!
எதிர்பாராமல் கிடைத்த பரிசல்லவா நீ!!!
அதனால்தான் எந்த எதிர்பார்ப்பும்
இல்லை உன்னிடத்தில் எனக்கு!!
சிறு புன்னகையும் பிறரை அடிமைப்படுத்தும் என்பது புரிந்தது உன்னால்!!
என்னை விடவும் உன்னை நேசிக்கிறேன்...
என்று சொல்லி நம்மை பிரிக்க
விரும்பவில்லை நண்பா!!
நட்புக்கான தனித்துவத்தை அறிந்தேன்
உன்னுடன் பழகியபின்!!
எப்பொழுதடா மனிதனுக்கு ஈர்ப்புவிசை வந்தது ???
இவ்வளவு வேகமாய் ஈர்க்கிறாய்!!!
இறுதிவரை நன் உன்னுடன் இல்லாமல்
போகலாம் ஆனால்...
இருக்கும் வரை உண்மையாய்
இருக்க விரும்புகிறேன்!!
உன் வருகையை மகிழ்வுடன்
ஏற்றுக்கொண்டவள் இன்று ஏனோ
பிரிவை ஏற்க தயங்குகிறேன்!!!!
ஓ... நட்பிற்கும் வேண்டுமோ முடிவுரை??
பிரிந்திருப்பேனே ஒழிய ஒருபோதும்
மறந்திருக்க மாட்டேன்!!!