கேளடி என்தோழி.......

ஏதேதோ பேசினாயடி..
நல்ல நண்பன் என்றாய்..
என் நண்பன் போல யாருமில்லை என்றாய்..
வாழ்க்கை முழுதும் என் நட்பு வேண்டும் என்றாய்..

ஏதோ சில நினைவுகள்..
இவைகள்தான் என்நெஞ்சை பிழியும் நினைவுகள்..
எப்படியோ போகட்டும் எனக்கென்ன,
என்று நினைக்கும் மாத்திரத்தில் கண்கள் குளமாகிவிடுகிறது..

உந்தன் வார்த்தைகள் எல்லாம் காற்றோடு போனதோ!!!
இல்லாத அன்பை எங்கே தேடுவேன்?..
எதற்காக இந்த நிரந்தர முடிவு?..
எப்படி முடிந்ததது உன்னால்?..
கேள்விகள் சூழ்ந்து என்னைகொல்கிறது..
நீயோ மலிவாய்க் கிடைக்கிற அன்பில் மறந்துவிட்டாய் என்னை..

இதயத்தை இறுக்கி பிடிப்பதைபோல உணர்கிறேன்..
துருபிடித்த வாளைக்கொண்டு இதயத்தை, இரக்கமில்லாமல் அறுத்தால் சற்றே இதமாகத்தொன்றுமோ..

என்றாவது உண்மையான அன்பு வேண்டும் என்றால்,
என்னை நினைத்துக்கொள்..
அக்கணம், உந்தன் கண்களில் இருந்து,
விழும் ஓர்துளியில் என்ஜென்மம் ஈடேறும். இனம்புரியா வேதனையின் எல்லையில்,
சிறகிழந்த ஈசலாய்,
மெல்ல மரணத்தை நோக்கி ஊர்ந்து கொண்டிருக்கும் ,
நான் உந்தன் உயித்தோழன்..

எழுதியவர் : அருள் (11-May-12, 2:45 pm)
பார்வை : 577

மேலே