தெய்வீக நட்பு,,,,,,,,,,,,

நண்பா !
என்னை பார்க்கும்
போதெல்லாம் - சிரிக்கிறாய் ,
மலரும் பூவாய்
முகம் மலர்ந்து - அழைக்கிறாய் ,
தினம் எனை பார்த்தாலும்
திடீர் விருந்தாளியை
உபசரிப்பது போல் உபசரிக்கிறாய் ,

எந்த அவசர வேலையையும்
எனக்காக ஒதுக்குகிறாய் ,
உறவுகளை எல்லாம் உதறிவிட்டு
என்னோடு ஊர் சுற்ற
வந்து விடுகிறாய் ,

என்னை தவிர்த்து
சாப்பிட மறுக்கிறாய் ,
சாப்பிடுகையில்
என் தட்டில்
உன் உணவையும்
எடுத்து வைகிறாய் ,

எவ்வளவு திட்டினாலும்
சரி சரி விடு என்கிறாய்,
கோபமாக முறைத்தாலும்
குழந்தையாக சிரிக்கிறாய் ,

உனக்கு
உதவாத போதும் - எனை
உதாசீன படுத்தவில்லை - நீ
என் சுமைகளை
சுமந்து கொள்ள
குனிந்து நிற்கிறாய் - நீ ,

கண்ணனாக போதிக்கிறாய்
கர்த்தராக மன்னிக்கிறாய்
அல்லாவாக அன்பு சொல்கிறாய்
கவலைகள் மறக்கும்
மருந்தாக இருக்கிறாய்
பாசமெனும் விருந்தாக இனிக்கிறாய்,

மாகன்களின்
சந்திப்பை விட - உன்
சந்திப்பில்
மனம் மகிழ்கிறது

நண்பா !
சந்நிதானத்தின்
தெய்வ தரிசன சிலிர்ப்பை
உன் தூய நட்பில்
உணர முடிகிறது - இப்போது.

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (11-May-12, 5:14 pm)
சேர்த்தது : பந்தளம்
பார்வை : 447

மேலே