தவறு என்மீதே!!
நண்பா!!
அப்படி என்ன தவறு செய்துவிட்டேன் நான்??
விசாரனையே இல்லாமல் தண்டனை தருமளவு??
காரணமே சொல்லாமல்
பிரிந்து சென்றுவிட்டாய் நீ..
குழம்புவது என்னவோ நான்தான்!!
காரணம் தேடி அலைவதா??
உன்னை தேடி அலைவதா??
ஒரு வாய்ப்புக் கொடு என்றுதான் மன்றாடுகிறேன் உன்னிடம்..
என் தவறை நியாப் படுத்தவோ
திருத்திக் கொள்ளவோ அல்ல..
என்னவென்று தெரிந்துகொள்ள!!
என்னை முதல் முறையாக நீ
பார்த்ததாய் கூறிய போது அறியவில்லை கடைசி முறையாக பார்க்கவும்
விரும்புவாய் என்று!!
எவ்விதமான தவறையும் நட்பு மன்னிகும்தானே???
ஆனால் தவறே செய்யாத
என்னை தண்டித்ததேனோ??
தவறு செய்தவள் நானாகவே
இருக்க விரும்புகிறேன் ..
ஒருவேளை உன் எண்ணம் தவறு
என்பதை அறியநேர்ந்தால் நீ
வேதனைப் படுவாயல்லவா??