விலையாய் கொடுத்த என் நட்பு
தோழா!!
முதன்முறையாக கடவுளிடம் மன்றாடுகிறேன் துன்பத்தை தரவேண்டி...
ஆறுதல் சொல்லவாவது
நீ வருவாய் அல்லவா??
நீ வள்ளல் என்பதை ஒப்புக்கொள்கிறேன்... அதற்காக இப்படியா வாரி வாரி
தருவாய் வெறுப்பை??
தியாகிப் பட்டம்தான் தரவேண்டும் உனக்கு...
நீ தியாகம் செய்தது என் நட்பையல்லவா??
விட்டுக் கொடுக்கிறேன் என்று
சொல்லி சொல்லி இன்று என்னையே
விட்டுக் கொடுத்து விட்டாயே!!
"மறதி" என்ற சொல்லையே மறக்க விரும்புகிறேன்..
நீ என்னை மறந்துவிட்டதால்!!
வெகு நன்றாய் நடிக்கிறாய் நண்பா
என்னை பிடிக்காததுபோல்...
உனக்கென்ன வானவில்லாய் தோன்றி மறைந்துவிட்டாய்..
உன் சுவடுகளை மறக்கவும் முடியாமல் அழிக்கவும் முடியாமல்
தவிப்பவள் நான்தானே!!!
நீ அளித்த பரிசுகளிலேயே எனக்கு
மிகவும் பிடித்தது "பிரிவு"
ஆம்... பரிசாகத்தான் நினைக்கிறன்...
உன்னை அதிகம் நினைக்க வைத்ததால்!!
என்னை விட்டு செல்வதுதான்
உனக்கு மகிழ்ச்சி என்றால்..
அந்த பழியும் உனக்கு
வேண்டாம்..
நானே சென்றுவிடுகிறேன்..
ஆம்.. உன் மகிழ்சிக்கு நான் கொடுத்த விலை "என் நட்பு"..