அம்மா உனக்கு ஓர் இறுதி அஞ்சலி

என் அம்மாவுக்கு

முதலில் மொழியை கற்றுக்கொடுத்தவளுக்கு
இறுதி அஞ்சலி படைக்கிறேன் !

தந்தையை இழந்தும் ,
தாயாய்
ஆசானாய்,
நண்பனாய் ,
ஆயிரம் நெறிகளை
பக்குவமாக சொல்லிகொடுத்தவள் ,
பக்குவப்பட்டால் இன்று முதல்
கடவுளாக !

பெண்ணாய் பிறந்து
ஆனாய் வாழ்ந்தவள் ,
கட்டைவண்டிக்கு கூட காசு இல்லாததால்
கால்களாலே என்னை சுமந்தவள் ,
ஓயாமல் உழைத்து ஊனமாய்
உட்கார்ந்தவள் !

மனிதனாக பிறந்த என்னை
மனிதனாகவே வளர்த்தவள் ,
ஊட்டிய சோறில்
உணர்வுகளையும் ஊட்டியவள் ,
தேடியபோது இல்லாவிட்டால்
துடித்துபோவாள் ,பதரிப்போவாள் !

என்னை கண்களில் வைத்து காத்தவள் ,
தனக்கென பாராமல்
எனக்காய் வாழ்ந்தால் ,
வளர்பிறையாய் நாங்கள் வளர்ந்தோம்
தேய் பிறையாய் அவள் தேய்ந்தால் !

அவள் என்னை ஆசையாய் அழைத்தது
"முருகைய்யா "!

நான் நோயுற்றால்
அவள் துடித்திடுவாள் ,
பச்சிலை மருந்து தடவி
படுத்திடுவாள் பக்கத்தில் ,
தலைகோதும் சுகத்தில்
பறக்கவைப்பால் நோய் தன்னை !

பறக்க கற்றுக்கொடுக்கும்
தாய் பறவைபோல்
எனக்கு வாழ்க்கையை சொல்லிகொடுத்தவள் ,
விதியின் சதியால்
விதவை ஆனாலும் ,
தனம்பிக்கை துணையால்
எங்களை தலை தூக்கியவள் !

செம்மையான அன்பை கொண்டவலானதால் ,
செங்கேணி அம்மாள் பெயர் பெற்றால் ,
அன்பால் அனைவரையும் அரவணைத்தவள் ,
பண்பை பொழிந்தவள் ,
எங்கள் கண்ணீரை துடைத்து
கடவுளாய் வாழ்ந்தவள் !

கூரைக்கூண்டிலும்
எங்களை அன்பினால்
கோடீசுவரர்களாக ஆகியவள் ,
நாங்கள் பசியரியும் முன்னே ,
பசியாற்றிய பறவை அவள் ,
எங்களை விட்டு
எங்கு பறந்து சென்றாயோ அன்னையே ,
உங்கள் பாச குஞ்சுகள் ,
பரிதவிக்கிறோம் அனாதையாய் !

இருக்கும் போது புரியவில்லை
இறந்தபின்பு புரிகிறது ,
வலிகளின் அனுபவத்தை
வரிகளில் விளக்க முடியவில்லை !

கந்தைகளை நீ கட்டி காசு சேமித்து
எங்களை கல்லூரிவரை படிக்கவைத்தாய் ,
சம்பாதித்து சாதிக்கிறோம் ,
செலவு செய்ய நீ இல்லை
தாயே !

ஊனமாய் நீ இருந்தாலும்
ஒழுக்கமாய் எங்களை வளர்த்தாய் ,
பெண்ணாய் பிறந்து
கடவுளாய் மறைந்தாய் தாயே ,
இன்று நாள் மட்டுமல்ல
என்றுமே எங்கள் குல தெய்வம் நீதான் !

எழுதியவர் : வினாயகமுருகன் (12-May-12, 9:49 am)
பார்வை : 11418

மேலே