என் சோகம்
உதவி என்று வா உயிரையும் தருகின்றேன்
கல்வி என்று வா கற்றதை தருகின்றேன்
உணவு என்று வா உள்ளதை தருகின்றேன்
காதல் என்று வா உண்மையான உள்ளத்தை தருகின்றேன்
ஏனென்றால்
இந்த அனைத்தையும் செய்ய
எனக்கு ஒருவரும் இல்லை
என் ஏக்கங்களும் கலக்கங்களும்
உனக்கு வர வேண்டாம் என்று தான்
என் சோகம் என்னோடு போகட்டும்
உன் வாழ்கயிலாவது மகிழ்ச்சி பொங்கட்டும்
உலகில் உள்ளதுக்கு ஆசை படாதே
நல்ல உள்ளத்துக்கு மட்டும் ஆசை படு ..........
ராஜ் குமார்