ஏமாற்றாத காதலி..!

கடவுளென்று
நீ
கல்லை வணங்கச்சொல்லும்
போதெல்லாம் கைகள்
தானே வணங்குகிறது
எதிரிலுள்ள உன்னை ...!
"எனக்கே நமிக்கையில்லா
என்மேல் எல்லையில்லா
நம்பிக்கை கொண்டிருக்கும் "
நீ எனக்கு
தாயுமாய் மட்டுமல்ல ...
விட்டுச்சென்ற தந்தை
இல்லாத தங்கை
தோள்கொடுக்கும் தோழி
ஏமாற்றாத காதலி
சுருங்கச் சொல்லிவிடவா ...
நானேன்றாலே
அது நீதான் ...!
என்னைச் சுமந்த உன்னை
என் கருவறையில் சுமக்க
இன்னொரு பிறவியென
இருந்தால் நிச்சயம்
பெண்ணாக பிறப்பேன் ...
ஏமாற்றத்தை ஏமாற்றாமல்
தரும் இறைவா ...
எனது இந்த ஆசையினையாவது
ஏமாற்றாமல் தருவாய்...
ஆண்டுகள் பலகடந்தாலும்
இன்னமும் குழந்தையாகவே
என்னை பாவிக்கும்
அழகிககளின் அழகி
அன்பு அம்மாவுக்கு
அன்னையர் தின வாழ்த்துக்கள் ...
உலக அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்....