இன்னும் ஒருமுறை உம் மகனாக...

இன்னும் ஒருமுறை உம் மகனாக...

அனலே..அழகே..முக்கனியே..முழு முதல் தலைவியே..
பூங்குருத்தே..புது தேரே..ஆழ்கடல் முத்தே..என் உயிர் சொத்தே..

அழும் போது அணைத்து
விழும் போது தாங்கி
சிரிக்கும் போது மகிழ்ந்து
சிறப்படைய செய்த வான் முகிலே...

சிந்தையில் உன்னை நிறுத்தி
விந்தையில் வியக்கிறேன்..
உன் மகனாய் நான் ஆனதால்...

இன்னும் ஒருமுறை உம் மகனாக...

பள்ளி முடிந்தவுடன் பையை தூக்க...
விடியுமுன் சமைத்து கல்லூரி வழியனுப்ப...
தொலைகாட்சி முன்பு எனக்கு சோறூட்ட...
அடம்பிடிக்கும் போது குளிப்பாட்ட..
முந்தானையால் தலை துடைக்க...
சொல்லாமல் போகும் போது தெருவெங்கும் தேட..
மதிப்பெண் குறையும் போது திட்ட..
பண்டிகை காலங்களில் துணியெடுக்க...
நெற்றியில் முத்தமிட்டு நெடு பயணத்திற்கு வழியனுப்ப...
என் தொலைபேசி அழைப்புக்காக காத்திருக்க...
வீட்டுக்கு வரும்போது புண்ணகைக்க...
இன்னும் ஒருமுறை உம் மகனாக பிறக்க வரம் கொடு..

ஆவாரம் பூவெடுத்து
அடுக்கடுக்காய் சரம் தொடுத்து
ஆரவாரம் இல்லாத என் அன்னைக்கு
பூ ஆரம் சூடி, சகாவரம் கேட்டு
சமர்பிக்கிறேன்..

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்...

எழுதியவர் : Venish (13-May-12, 12:45 pm)
சேர்த்தது : venish
பார்வை : 176

மேலே