உன்னோடு மட்டும் வாழ வேண்டுகிறேன்...!!

என் வாழ்வாணவனே!!
பார்வை பறித்து
கண்ணாமுச்சி ஆடுகிறாய் நீ..!
வார்த்தைகள் எடுத்து
எழுத்துகள் தர மறுக்கிறாய் நீ..!
உணர்வை மறித்து
உயிரை களவாடுகிறாய் நீ..!
சுவாசம் அடைத்து,
மூச்சுகாற்று தேடல்
செய்கிறாய் நீ..!
என்றாலும் என்
வாழ்க்கையில் மனம்
புரிந்து ஏன் என்னோடு
வாழ மறக்கிறாய் நீ..!