கத்தியின்றி ரத்தமின்றி...

யுத்த களமாகிவிட்டது இதயம்

பார் என்கிறது மனம்
பார்க்காதே என்கிறது மானம்...

சிரி என்கிறது சிக்னல்
சிரிக்காதே என்கிறது சிக்கல்...

தொடு என்கிறது வயது
தொடாதே என்கிறது அறிவு...

போர்க்களத்தில் சாவதென்னவோ
நான் மட்டும் தான்...

மீண்டும் பிழைத்து மீண்டும் போர்
உன்னைக் காணும் போதெல்லாம்...

மனதில் இடம் கொடுத்தால்
உயிரைத் தின்கிறாயே...

எழுதியவர் : shruthi (13-May-12, 3:15 pm)
பார்வை : 1062

மேலே