மாக்களை மக்களாக்கும் முயற்சியோ..?

தன் மழலைக்கே
தாய்ப் பால் தராத
மக்கள் இங்கே...

மாக்களுக்கும் உன்
மார்பைத் தரும்
தாய் நீ எங்கே..!?

மக்கள் மாக்களானதால்
மாக்களை மக்களாக்கும்
முயற்சியில் நீயோ..?

நீ ஒரு...

தாய்மையின் இலக்கணம்,
தாகம் தீர்க்கும் தண்ணீர்...

வெட்டி எடுக்காத வைரம்,
விதைக்காமல் செய்யும்
அறுவடை...

வரையாத ஓவியம்
எழுதாத காவியம்..!

கானல் நீரையும்
காணிக்கு பாய்ச்சலாம்,
கள்ளிப் பாலையும்
காய்ச்சிக் குடிக்கலாம்,

உன் போல் தாய் இருந்தால்...

அன்னையைப் போற்றும்
புண்ணிய தினத்தில்..

தாய் உன்னைப் போற்றி,
பாதம் பணிவதை - என்
பாக்யமாக கருதுகிறேன்..!

அன்னையர் தின
வாழ்த்துக்களுடன்...

எழுதியவர் : வெளியூர் தமிழன் (13-May-12, 8:31 pm)
பார்வை : 215

மேலே