azhagey
பெண்ணே உன் புன்னகை கண்டு
மோனலிசா சித்திரம் ஒன்று
சட்டென்று வியப்பில் ஆழ்ந்தது
அழகே..
பெண்ணே உன் இதழ்கள் கண்டு
பூக்களை மறந்து வந்து
தேனினைக் கொய்தது வண்டு
அழகே..
வானிலே மௌனமாய் உள்ள
நிலவும் வந்தது மெல்ல
உன் கன்னத்தினை செல்லமாய்க் கிள்ள
அழகே..
கண்ணே உன் பார்வையே போதும்
இனி இங்கு வேறென்ன வேண்டும்
அமிர்தமும் சலிப்பைத் தரும்
அழகே..