ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

நல்ல தீனி
ஊடகங்களுக்கு
சாமியார்கள் கூத்து !

மெய்ப்பித்தனர்
கடவுள் இல்லை
சாமியார்கள் !

இலவசம் மாற்றம்
சொல் மட்டும்
விலையில்லா !

விமானிகள் வேலை நிறுத்தம்
அமைச்சர் பிடிவாதம்
பயணிகள் துன்பம் !

எந்த ஊரும்
ஈடாகவில்லை
பிறந்த மண்ணிற்கு !

தேவையற்றதை நீக்கிட
கிடைத்தது
சிலை !

எழுதியவர் : இரா .இரவி (15-May-12, 10:19 pm)
பார்வை : 278

மேலே