கண்ணீர் அஞ்சலி

படிக்க கேட்டிருக்கிறேன்
கொஞ்சும் மொழி பேசும்

குழந்தை பருவத்திலே

வருமானவரி கட்டியவள் அவள் என்று !!!




பார்த்து ரசித்திருக்கிறேன்

பல நூறு தொலைக்காட்சி

விளம்பரங்களில் குட்டி தேவதையாய் !!!




இன்று கதறி அழுகிறேன்

அந்த விட்டில் பூச்சி வாழ்வைப்போல

இந்த லிட்டில் பூவின் வாழ்வையும்

இறைவன் எழுதி விட்டான் என்று !!!!!


விமான விபத்தில் அகால மரணமடைந்த

குட்டி நட்சத்திரம் தாருணிக்காக

எழுதியவர் : எம்.ஆனந்தமணி (16-May-12, 12:18 pm)
சேர்த்தது : Anandhamani
Tanglish : kanneer anjali
பார்வை : 208

மேலே