திங்களும் தோற்கும்நீ தூய வெண்மையில் வர
மல்லிகை வெண்மையில் மஞ்சளில் செண்பகம்
முல்லைமலர் கள்பூத்து முத்துமுத்தாய் தேன்சிந்த
பிங்க்நிறப் பூரோஜா தென்றல் வரவேற்க
திங்களும் தோற்கும்நீ தூயவெண்மை யில்வர
சங்கக் கவிநான்வந் தேன்
------பல விகற்ப பஃறொடை வெண்பா