எப்படி வந்தான் என்னுள்
வகுப்பறைத் தோழிகளின்
சுவாரஸ்யமான உரையாடல்
நான் மட்டும்
உன் நினைவாடலில்!!
நீ கசக்கியெறிந்த
காகிதத்தை எடுத்து
வைத்திருக்கிறேன் பத்திரமாக..
காதல் பத்திரமாக..
இப்போதெல்லாம்
அடிக்கடி நான் என்னை
அலங்கரித்துக் கொள்கிறேன்!
உன் இதயத்தை அபகரிக்க..
குளிக்கச் சென்ற
ஓர் காலைப்பொழுது
குடத்து நீரில் உன்முகம்
வெட்கத்தில் குளிக்காமலே
வந்துவிட்டேன்!
போடா போ
நீரில் குளித்தாலென்ன
உன் நினைவில் குளித்தாலென்ன!!
ஓர் நாள் கல்லூரி மைதானத்தில்
மரத்தடியில் உன் நண்பர்களுடன்
பேசிக்கொண்டிருந்த உன்னை
பார்த்துக்கொண்டே சென்றேன் ..
என் தோழி கேட்டாள்
வைத்த கண் எடுக்காமல்
பார்த்துக்கொண்டிருந்தாய்! என்று
என் கண் அவனைத்தான்
எண் கணவனைத்தான்
என்றது என் மனம்!!
உனக்கு கண்ணாடி வளையல்
பிடிக்கும் என்று நீ யாரிடமோ
சொல்வதைக் கேட்ட நாள்முதல்
நான் கடைத்தெரு போகும்போதெல்லாம்
கண்ணாடி வளையல் மட்டுமே
வாங்குகிறேன் கலர்கலராய்..
தூங்கிக்கொண்டிருந்த ஓர் நள்ளிரவு
நீ என்னை இருக்கியணைத்து
என் இடது கன்னத்தில் ஓர் "இச்"!!
ஆ! வென்று அலறிவிட்டேன்
ச்சீ கெட்ட கனவா டீ
என்று அம்மா கேட்டாள்
இல்லை முத்தக் கனவு
என்று சிரித்துக்கொண்டேன்
எனக்குள்..
உறவுப்பெண்ணின் திருமணம்
நினைத்துப் பார்க்கிறேன்
மணமேடையில்
உன்னுடன் என்னை..
உன்னுடன் பேச
முற்படும்போதெல்லாம்
முந்திக்கொள்கிறது என் வெட்கம்..
அட என்ன இது
மாதவிடாய் வயிற்றுவலியை விட
கொடுமையாய் இருக்கிறதே
இந்த காதல் வலி !!