ருத்ரா

சிலுவை
_______________________________ருத்ரா


தூக்கம் எனும் பறவை
ஏந்திச்சென்றது எங்கோ.
கனவுத்தீவில்
இறங்கிவிட்டது.
அங்கும் அதே அதே
கண்கள் தான்.
அந்த அம்பு பட்டவன்
இன்று இங்கே
அம்பு மழையில்
சல்லடை தான்.
விழியை வீசிவிட்டு
சென்றவள் பார்வையில்
தொலைந்தவன் அன்று
தொலைந்தவன் தான்.
இந்த கனவில் கரையும்
நுரை ஆனேன்.
காலையில் எழுந்தேன்!
சுள்ளென்று
நுள்ளிசச்சொன்னது
சூரியனும்.
அந்த சன்னல் கம்பியில்
கிசு கிசுத்துக்கேட்டது.
நானும் தேடுகிறேன்
அந்த முகத்தைத்தான்
கண்டாயா சொல்.?
சீக்கிரம் சொல்
கண்கள் கண்கள் கண்கள்
அவள் கண்கள் தான்.
அந்த வெப்பம் தாங்கவில்லை .
அவனும் அந்த
சன்னல் கம்பிசிலுவையிலே
துடிக்கின்றானே
என் செய்வேன்?
_________________________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (23-Oct-24, 2:22 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : ruthraa
பார்வை : 2

மேலே