என் தங்கம்.....!

எப்போதும் நான்
பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும் என்று- உன்னை
என் கண்ணில் வைத்தேன்...

எப்போதும் பேசிக்கொண்டே
இருக்க வேண்டும் என்று-உன்னை
வார்த்தையில் வைத்தேன்...

எப்போதும் நினைக்க வேண்டும்
என்று -உன்னை
என் மனதில் வைத்தேன்..

எப்போதும் மறக்கக்
கூடாதென்று-உன்னை
என் இதயத்தில் வைத்தேன்...

இப்படி எல்லாம் செய்தும்
என் மனம் கேட்காமல்
"என்னை உன்னில் வைத்தேன்"
என் தங்கமே...
என்னை உன்னில் வைத்தேன்...

எழுதியவர் : (18-May-12, 12:56 am)
பார்வை : 227

மேலே