ஒரு பூ.....தருவாயா..?
என் தங்கமே
உன்னிடம் ஒரு பூ கேட்பேன்..
தருவாயா?
அதற்கு வாசனை இல்லை
ஆனால் உன்னைப் போல்
நல்ல மனம் உண்டு..
அதற்கு நிறம் இல்லை
ஆனால் உன்னைப்போல்
ஒரு திடம் உண்டு..
அது சிறியது அல்ல...
உன் மனதைப்போல்
மிகப் பெரியது..
அது பறிக்கக்கூடிய அளவிற்கு
தாழ்ந்தது அல்ல...
உன் உள்ளத்தைப்போல்
மிக மிக உயர்ந்தது...
அது தோட்டத்தில் விளையும்
பூ அல்ல -உன் இதயத்தில்
விளையும் மிகப் பெரிய பூ
அது பறித்தால் வராது...
கொடுத்தால் வரும்...
அது பாரத்தை கொடுக்கும் பூ அல்ல...
மன பாரத்தை கரைக்கும் பூ...
எனக்கு வேண்டிய அந்தப் பூ -உன் இதய கமலத்தில் உள்ள "மன்னிப்பு என் தங்கமே".....