போலி போதனை எதற்கு

‎---- போலி போதனை எதற்கு ----

நான்
ஆண் இனம் இல்லை
என்பர்வர்கள்
ஆதீனம் ஆகும்போது

எங்கள் அரவாணிகள்
மனிதர்களாக கூட
மதிக்கபடுவதில்லையே
ஏன்?

ஈரமுள்ள நெஞ்சம்
ஒன்று எழவில்லையே
ஈழப்படுகொலைக்கெதிராக

ஈனத் துறவிகள் பின்னே
கேன பிறவிகள் கூட்டம்
செல்வது எங்கே?

பக்தன் பணத்தில்
படுக்கைவிரித்து
சோமபானமருந்தி
படுத்துகிடக்கும்
சோம்பேறி கழுதைகள்
பரமபொருளாகும் போது..

தோல் வியாதியுற்று
சேரில் நிதம் நின்று
கால் பாதி மூழ்கி...,
உழைக்கும் ஜனத்தை
கீழ் சாதியென்று
கிறுக்கி வைத்தவன் யார்?

தங்கையின் கற்ப்பை
சூரையாடிவனை
தன் கையால் கொலை செய்து
தர்மம் காத்த
தன்மானங்கள்
சிறைக் கைதியாக
இருக்கும்போது

காம களிப்பில்
கன்னிகளை
கட்டிபிடிக்கும் - பிரபல
கட்டில் மிருகங்கள்
சாமியாகிப் போன
சங்கதி என்ன?

விந்தையிலும் விந்தை
விந்தணு சேர்க்கைக்கு
வீற்ற ஒரு சக மனிதனை
சாமியென்று வணங்குவது.

மந்தையிலும் மந்தை இது
ஆடுகளின் மந்தை
அறிவற்று
அரிவாள் ஏந்தியவன்
பின்னோடுவது.

கடவுளை அர்ச்சிக்கும்
கறைபட்ட கைகளை விட
கழிவறை சுத்தம் செய்யும்
விளக்கமாறு புனிதமானது.

இன்னும் என்ன சொல்ல
இதயம் கொதிக்குது மெல்ல

நல்ல வேளை
அந்த விவேகானந்தர்
உயிரோடில்லை.
இன்று
எந்த கவரிமான்களும்
மயிரோடில்லை.

தோழா...
தத்துவம் புத்தகம் படி
தியானம் ஞானம் வழி
புது நம்பிக்கை வலுக்கும் .

அதில்
வேதனை தீர்க்க மற்றவன்
போதனை எதற்கென்ற
மகத்துவம் பிறக்கும் .

---- தமிழ்தாசன் ----

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (19-May-12, 2:56 am)
பார்வை : 282

மேலே