என் காதல் புளிய மரத்தில் மோதியது
ஒருவானம் பூக்கொட்டி
ஒரு குடம் தேன்சிந்தி
என் உள்ளத்தை
நெகிழ்த்தவள் நீயே!
ஒரு கிணறு
கண்ணாடித்துகள்கள்
கொட்டி
ஒரு கடல்
நெருப்பை வைத்து
என் உள்ளத்தை கிழித்தவள் நீயே!
காதலாகி
பின்
சாதலாகாமல்
சாகிற பயணம்
சத்தில்லாத
நம் காதலின்
முடிவாய்...
நம் காதல்
மகிழுந்து
தோல்வியின்
புளியமரத்தில்
முட்டிச்சிதைந்தது.