எனது வழித்தடங்களில் ....

மரணத்தின் பாதையில் எனது மௌனப்பயணம் .....
எனது வழித்தடங்களில் ..வலியின் ஒளி..!
இருட்டை நோக்கி எனது பயணம் ...இதுவரை
நான் அனுபவித்திராத அற்புத மரணம் ...!
எனது வலிகளை கடந்து வரும் வழியில் எனக்குப்பின்னால் யாரவது வந்தால்
உதவட்டுமேஎன்று என் விழிகளை ...பதித்துவைத்திருக்கிறேன் ...!
எனது இதயத்தையும் ..எட்டா உயரத்தில் வானில் வீசி ...வழிதேடி வருபவர்களுக்கு வலிசொல்ல...உலவவிட்டிருக்கிறேன்
எனது ஆத்மாவின் அழுகையோடு நான் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்கிறேன் அனாதையாய் .....!
சித்தாந்தங்களுக்குள் ..வேதாந்தங்களை சிக்கவைத்துவிட்டு நானும் இந்த உலகில்....
சிலகாலம் சிரித்திருக்கிறேன் ...!
அன்பின் ஆளுமை தாங்காமல் அப்போதும்
அழுதழுதே என்னை கண்ணீரில் கரைத்திருக்கிறேன் .....!
மரணத்தின் பாதையில் எனது மௌனப்பயணம் ...
எனது வழித்தடங்களில் ....
வாழ்க்கையின் வறட்டு வாய்பாடுகள் ....
தோல்வியின் இருட்டு வெளிச்சங்கள் ...!?