தங்கை திலகவதிக்கு திருமண வாழ்த்து (23 .05 -12 )

குயிலின் இனிய குரலெடுத்து
குடும்ப இனிமையில் வாழ்க பங்கெடுத்து !

மயிலின் நடன வனமெடுத்து
மிகிழ்ந்து வாழ்க நளினமுடன் !

அறம் வாழ குரலின் பொருளெடுத்து
அகம் வாழ்க மலரின் மணமெடுத்து !

திறமுடன் வாழ நற்செயலெடுத்து
"கலைமகள்" தினம் வாழ உன்னிடத்தில் "திலகா"

மகிழ்வுறும் இருவரும் திசைதோறும்
தமிழ் புகழாய் தினம் வாழ்க !

நிகழ்வுறும் இத்திருமண நாள்முதல்லெடுத்து
இன்பச் செயல் சுவையுடன் வாழ்க !

நினைவுறும் நலமாய் இருபிள்ளை
திறமுடன் பெற்றே நலம் வாழ்க !

புகழுடன் பொறுப்பேற்று புது வாழ்வை
பொறுமையெனும் கடலாய் நீ வாழ்க !

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
என வளமுடன் வாழ்த்தும் உன் அண்ணா !

"வாழ்க வளமுடன்"

என்றும் அன்புடன் "நட்புக்காக"
இன்று திருமண "வாழ்த்திற்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (22-May-12, 3:56 pm)
பார்வை : 1540

மேலே