"திருட்டுப் பயல்"தான்...
போன மாதம் கடன் வாங்கி...
நிதி நிறுவனம்..நடத்தத் துவங்கி..
இந்த மாதம்...
இரண்டு வீடு வாங்கி....
சொந்தவீட்டில் குடியேறும் ...
இவன் கெட்டிக்காரன்தான்
நமக்கு....என்றாலும்
"சில்லறை இல்லை" ...
எனச் சொல்லி...
"பத்துப் பைசா" தர முடியாத...
இந்தப் பேரூந்தின் நடத்துனர் மட்டும்
"திருட்டுப் பயல்"தான்
எனக்கும்...
உங்களுக்கும்.