பத்திரபடுத்து...

பத்திரபடுத்து.......
--------------------------------
அட்சய திருதிகை அன்று
நகை வாங்கினால்..
ஆகுமாம்.
கிளிப் பிள்ளையாய்
சொல்லிக்கொன்டிருந்தாள்,
ஆகும்ந்தான் ..
அவளுக்கு நகையும் ,
எனக்கு செலவும்.
வழி இல்லாமல் ,
கடை..கடையாய் ஏறி..
சின்னதாய்..
சில கிராம்களில் ..
விற்றுமுடிந்த்துவிடும் என்றோ ..
வேறுநாட்களில் வாங்க கூடாதென்றோ..
விழுந்தடித்து
மொய்த்து..
அடைநெருக்கிய ஜனத்திரளில்
பிசுங்கி..
பிதுக்கி...
வெளியே வந்தபோது
சிறிதாய்..
மெலிதாய்...
அவள் இதழோரத்தில்
கசிந்த புன்னகையைக் கண்டு
கையிலிருந்த பொன்னகை சொன்னது
பத்திர படுத்து
இந்த புன்னகையை!

எழுதியவர் : ந. ஜெயபாலன் , திருநெல்வேலி (23-May-12, 5:15 pm)
பார்வை : 284

மேலே