பதற்றமாய் அலையும் மனிதம்.

நீங்கள்-
பாறைகளிலிருந்தே...
கடவுளைத் தயாரிக்கிறீர்கள்.

கண் மூடி நிற்கும் கடவுள்...
பாறையைப் போலவே தோன்றுகிறார்.

பாறைக்கும்...
நீங்கள் தயாரித்த கடவுளுக்குமிடையே..
பதற்றமாய் அலைந்து கொண்டிருக்கிறது..
எனது மனிதம்.

எழுதியவர் : rameshalam (23-May-12, 3:43 pm)
சேர்த்தது : rameshalam
பார்வை : 166

மேலே