நகுலனின்..நழுவி விழுந்த கவிதை.

நேற்று நான் படித்த
நகுலனின் புத்தகத்திலிருந்து...
நழுவி வந்த கவிதை ஒன்று..
இரவெல்லாம் சுற்றி வந்தது
என்னையே.

அலையும் என் மனசுக்குள்...
சரியான இடம் தேடி அமர
அதற்குத் தெரியவில்லை.
அதற்கான இடம் தர
எனக்கும் அறிவில்லை.

என்ன செய்வது?
அலைகளைச் சொல்லிப் பிரயோஜனமில்லை...
கடல் இருக்கும் வரை.

எழுதியவர் : rameshalam (23-May-12, 3:24 pm)
சேர்த்தது : rameshalam
பார்வை : 227

மேலே