என் அன்புக் காதலன்

அலுவலகக் கோப்புகளுக்குள் கண்கள் பதிந்திருந்தாலும்
மனம் மூழ்கிக்கிடப்பது - அந்த கடற்கரையில் தான்

எத்தனையோ முறை கை கோர்த்து கடற்கரைக்
காற்றை சுவாசித்து சில்லிட்ட தேகத்துடன்
சிலிர்த்த ஞாபகம் ...

அலைகளுடன் ஓடி விளையாடி அழியுமென
தெரிந்திருந்தும் மீண்டும் மீண்டும் அலைகளுக்காய்
எங்கள் பெயரை எழுதி ரசித்த ஞாபகம் ...

காகிதத்தில் கப்பல் செய்தும்
மணல் வீடு கட்டியும் விளையாடிய ஞாபகம்...

கானல் நீராய் வரும் அவனின்
செல்லக் கோபத்தையும் சினுங்கல்களையும்
பதுக்கி வைத்திருக்கும் அந்த மரத்தடி ஞாபகம்...

கடலடியில் எங்கோ மறைந்து கிடக்கும்
எங்கள் பெயர் பொறித்த அந்த கூலாங்கற்கள் ஞாபகம்...

என் நினைவலைகளில் நீந்திச் செல்லும் அவன்…



பிழைகள் இருப்பினும் பிரசுரிக்கப்படாத
என் கவிதைகளை படகுப் பயணத்தின் போதெல்லாம்
ரசிக்கும் முதல் வாசகன்…

நான் செய்யும் தவறுகளை பொறுத்துக் கொள்ளும்
தந்தைப் போல
என் கோபத்தைப் பொறுத்துக் கொள்ளும்
தோழனைப் போல
எப்பொழுதும் தாமதமாக வரும் என் வருகைக்காக


படகுத் துறையில் காத்திருக்கும் அவன்
என் தந்தையாகி, தோழனாகி, காதலானகி
இறுதியில்…
யாதுமாகி நின்றான்

எழுதியவர் : கார்த்திகா கிருஷ்ணன் (23-May-12, 2:30 pm)
பார்வை : 277

மேலே