யாவும் நீ அறிவாயடி தோழி!

மனதில் மின்னலாக
கண்ணிமைப்பொழுதில்
சூடான மேனியாய்
பரவசச் சிலிர்ப்புடன்
மயங்கியப் பார்வையாய்
வார்த்தையை விழுங்கி
துடித்த செவ்விதல்கள்
கைமெலியாமல் நழுவிய
கண்ணாடி வளையல்கள்
காலசைக்காமல் பேசிய
வெள்ளி கொலுசொலிகள்
குளிர்வாடை வீசாமல்
நெளிந்த கொடியான இடுப்பில்
பட்டாடைகள் பாரமாகி கட்டவிழ

இருமனம் ஓருடலாய்
சேரத்துடித்தப் அப்பொழுதில்
இதயம் கனிந்துருகி
என்னவன் தொட்டப்பொழுதிலே
ஆயிரமாயிரம் உணர்வலைகள்
உடலெங்கும் இசையமைக்க
நீங்கினால் சுட்டுவிட
அணுகினால் குளிர்ந்துவிட
எறிந்த தீபத்தை அமிழ்த்திவிட்டு
என்னவனின் தீபமாய் ஒளிர்ந்தேன்
காலைக்கதிரவன் புலரும்வரையில்

வண்ணக்கோலமிட காலைப்பொழுதில்
வாசலில் உன் வரவைக்கண்டு
வெட்கத்தால் முகம்தாழ்த்தி
சொல்ல பலயிருந்தும்
சொல்லாமல் புன்சிரிப்பால்
மறைத்தேனடி அவையறிந்தும்
உண்மையாவும் நீயறிந்ததுப்போல
இருபுருவமதை மேல்லுயர்த்தி
சிரித்தாயடி அன்புத்தோழி!

எழுதியவர் : ஆயிஷா பாரூக் (25-May-12, 1:09 pm)
பார்வை : 7381

மேலே