என் இனிய சிநேகதியே ...!

என் நியாபகபெட்டகத்தில் நினைவுச்சில்லுகளாய் சிதறிக்கிடப்பவர்கள் ஏராளம் ....
அதில் வெகுசிலரே என் சிந்தனைப்பாதையில்
அடிக்கடி பிரயாணம் செய்யும் என் பிரிய பயணிகள்...
ஆனால் நீ மட்டும்தான் பெண்ணே ....
என் நியாபக பெட்டகமாகவே மாறியவள் ..!
உனது சிநேகப்புன்னகையால்தான் என்னுள்
மகிழ்ச்சிப்பூக்கள் சிறகடிக்க ஆசைப்பட்டன ...!
உனது மலர்முகம் கண்ட பின்புதான் என் மனச்சிறையில் அடைபட்டுக்கிடந்த
கவலைக்கைதிகள் கருணைகொலை செய்யப்பட்டனர் ...?!
பள்ளிப்பருவத்தில் வெறும் எட்டுப்பாடங்களை
மட்டுமே கற்றுவந்த நான் ....
உன்னோடு கல்லூரியில் பயின்றபோதுதான் ...
வாழ்கையின் எதார்த்த பாடத்தையும் கற்றுக்கொண்டேன் ...!
நாம் பழக ஆரம்பித்து சிலவருடங்கள்தான்
ஆனால் எனக்கு பல யுகங்களாய் பழகியது போல
ஒரு பகல்கனவு கண்டேன் ...
இந்த பிரபஞ்சத்தில் இன்னொரு ஜென்மம்மிருப்பது
உண்மையென்றால் ...நீயும் நானும் அடுத்த ஜென்மத்திலாவது ஒரு தாய் வயிற்றில் பிறக்க வேண்டும்...! பிரிவுஎன்பது எத்துனை துயராமானது என்பதை உன்னுடைய இந்தப்பிரிவு ..எனக்கு
மீண்டுமொருமுறை மீளாத்துயரத்தோடு என் இதயதுடிப்புகளில் மௌனமாய் கவிதை வாசித்துக்கொண்டிருக்கிறது ,,,!
அன்போடு பரிசளித்து விடைகொடுக்க என்னிடம் ..
உன் நினைவுகளை தவிர வேறேதும் இல்லையே என் தோழியே ..?!
மீண்டும் நாம் சந்திப்போம் என்ற நம்பிக்கையோடு ...
எனது விழிகளை உன்னோடு அனுப்பிவிட்டு ...
கண்ணீரில் கைஅசைத்து வழி அனுப்புகிறேன் மீண்டும் சந்திக்கும்வரை வலியோடு காத்திருக்கிறேன் ....
என்றும் அன்புடன் ...உன் சிநேகிதன்...

எழுதியவர் : இரா.அருண்குமார் (25-May-12, 4:13 pm)
பார்வை : 638

மேலே