திசைகள் அனைத்தும்..

போதும் சோதரனே!
நீ,
புரண்டு..புரண்டு.. படுத்தது
படுக்கும்போது பாயாக விரியும் பூமிதான்,
நடக்கும்போது
பாதை விரிக்கிறது;
எவரெஸ்ட்களைத் தொட
ஏ ணி களை த் தேடும்
என் நண்பனே!
உன் கால்கள்
இன்னும் பத்திரம்மாகத்தான் இருக்கிறது;
வெளிச்சத்தை விழுங்கிய இருட்டுகளாய்
இருக்கும் உன் மனதில் ...
நம்பிக்கை சூரியனை உதிக்கச் செய்!
கிழக்கு மட்டுமல்ல,
எல்லா திசைகளும்
உனக்கு சொந்தம்தான்!

எழுதியவர் : ந.ஜெயபாலன்,திருநெல்வேலி ந (25-May-12, 7:41 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 172

மேலே