மூடுபனி

செங்கல் இல்லாது
சிமெண்ட் இல்லாது
தொழிலாளர்களும் இல்லாது
அவசர அவசரமாய்
நீ எழுப்பிய
பிரமாண்டமான சுவர்
பகலவனின் கனப்பொழுது
வருகையால் தவிடுபொடியானது....

எங்கே உன் சுவடுகள்
காற்றில் மெல்ல
மிதந்து செல்கிறது
உன் கூக்குரலோடு....
"மீண்டும் நாளை வருவேன்"

உன் அயராத முயற்சி கண்டு
ஆதவன் தினமும் ஆச்சர்யத்தால்
மிளிர்கிறான்.

எழுதியவர் : harinikarthi (25-May-12, 7:27 pm)
சேர்த்தது : harinikarthi
பார்வை : 166

மேலே