கவிதை ..!

கவிதை எழுதும் நேரமிது ...
பல கற்பனை விதைகள் ...
தூவும் தூரிகை இது ..!
இப்பொழுது மணி ஒன்று ...
ஒரு மணிநேரத்திற்கு முன்பு ..?
இந்த கணையும் ..அந்த காகிதமும் ...
உறவாடிக்கொண்டன ......
சில நிமிடங்கள் தான் ...!
நினைவு வந்தவுடன் சிரிப்புடனே விலகின ...!
நிச்சியமாய் இந்த தடவை
காகிதத்தில் ...!
ஒரு அழகான கவிதை ...
பிறந்திருக்கும்..!

எழுதியவர் : இரா.அருண்குமார் (29-May-12, 12:16 pm)
சேர்த்தது : R.Arun Kumar
பார்வை : 214

மேலே