ஞாபகம்
உன்னை மறக்கத்தான் நினைக்கிறேன்
ஆனால்
பாழாய்ப் போன இயற்கை
படுத்துகிறதே கண்ணே
வெண் மேகம் திட்டாய் நுரை போல
என்னவள் பல் துலக்குகிறாள்
சாரல் மழை
என்னவள் கூந்தல் துளிர்கிறாள்
அது என்ன குயிலோசை
ஒ
என் பெயரை உச்சரிகிறாள்
இப்படி
எவ்வாறோ உன்னை நினைவுபடுத்துகிறதே பெண்ணே
நீ எப்போது என்னைப் பற்றி நினைப்பாய்
எதாவது இறுதி ஊர்வலம் உன்னை கடக்கும் போதா??

