வரமாய் வந்த சாபம்!

இருந்த இடத்தில்
இருந்தபடி,

நிற்கும்போது..
நடக்கும் போது...
சாப்பிடும் போதும்...
உறங்கும் போதும்...

வீட்டில்...
ரோட்டில்...

எங்கிருந்தாலும்
கைபேசியில் ..
பேசுகிறோம்!

கைபேசி..
விஞ்சானம் வாங்கி தந்த வரம்!

கட்டிடங்கள்
தாங்கி நிற்கும்
ஆன்டெனாக்கள்...

விட்டு விலகாத
தொடர்பு எல்லைகள்!

நினைத்தவுடன் பேச முடிகிறது...
எங்கேயும்... எபோதும்..!

காற்று புகமுடியாத
கண்ணாடி அறைக்குள்ளும்
யூடுருவும் கதிர்கள்.
கலகலப்பாய் பேசுகிறோம்
கால் மணி.. அரை மணி நேரம் என்று...!...?

ஐநூறு ரூபாயிலிருந்து ...
பல ஆயிரத்திலும்...

மேன்மை செய்யப்பட்ட
வசதிகள்!
பேஸ் புக்
யு டுப்
மெயில்
கைக்குள் அடங்கி நிற்கும்
உலகத் திரட்டிகள்

உன்னைவிட
என்னில் வசதிகள் அதிகம்...
பெருமை பேசும் நேரங்கள் ....
வரமாய் வந்த வசந்தங்கள் என்கிறோம்!

காதுகளின் வழியாய் இறங்கும்
கதி வீச்சால்
முடங்கி போகும் ...மூளை நரம்புகள்...

ஆன்டெனாக்கள்
வழியாய்
ஊருக்குள் புகுந்திருக்கும் புற்று நோய்கள் ...

எதிரிகள்
இல்லாமலேயே
உலக உரினங்கள் அழிந்து கொண்டிருக்கும் பேராபத்து..

அனுமதி இல்லாமலேயே
உன் வீட்டுக்குள்
தன் வீட்டை கட்டிய சிட்டு குருவிகள்..
கொத்து.. கொத்தாய்..
ஒட்டு மொத்தமாய்
அழிந்ததும்... அழிவதும்...
வரமா...?
வரத்தால் வந்த சாபமா?

எழுதியவர் : ந.ஜெயபாலன்,திருநெல்வேலி ந (31-May-12, 8:34 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 193

மேலே