பிழைக்காமல்
மழை நீர்
தன் வெள்ளை நிற சொக்காயில்
பட்டு விடுமோ என
நான்
ஒதுங்குகையில்...
சாலையில்
வேகமாய்
வரும்
வாகனம் என் மேல்
மழை நீரை
இறைக்காமல்
நகர்ந்த வேளையில்...
.
என்
காலணிகளின்
வேக நடையில்
பின்னால்
என்
சொக்காயில்
சேறாய்!!