குழந்தை மனசு
என்னுடைய
கருப்பு கண்ணாடியை
அணிந்து கொண்டு
எம்.ஜி ஆர் என்கிறான்.
தலையில்
குல்லாவை
அணிந்துகொண்டு
நேரு மாமா
என்கிறான்.
மூக்குக் கண்ணாடியை
அணிந்து கொண்டு
காந்தி தாத்தா
என்கிறான்.
கையில் கைதடி
வைத்துக் கொண்டு
அவ்வை பாட்டி
என்கிறான்
கத்தியை கையில் பிடித்து
பெரிய மீசையை
முறுக்கி விட்டு நிமிர்ந்து
வீரபாண்டிய கட்டபொம்மன்
என்கிறான் மேடையில்!
தன பள்ளியில்
எல்.கே ஜி படிக்கும்
என் பேரனின்
ஒவ்வொரு பள்ளி
ஆண்டுவிழாவிலும் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
