எனது மனமார்ந்த நன்றிகள்

வெட்டிக் கொண்டாட விருப்பமில்லை - கேக்கை
ஒட்டிக் கொண்டாட விரும்பினேன் - எனவே என்
சுட்டிக் கவிதைகளை மலர் சரமாக்கி - உங்களை
கட்டி வைத்தே தமிழ் விருந்து வைத்தேன்....!
தட்டிக் கழிக்காமல் அதை ரசித்தீர் - செல்லமாய்
குட்டி என்னையே சிறக்க வைத்தீர்.....!
புட்டிப் பாலருந்தும் மழலைக்கும் - தாயின்
மெட்டி ஒலி அது மெல்லிசை போல் - என்னை
திட்டி திறமை செய்த தோழியரே தோழர்களே
முட்டி முயற்சி செய் முன்னேறுவாய் என்றீரே
வாட்டி வதைக்கின்ற நினைவுகள் புறம் தள்ளி
போட்டி புவனத்தில் புத்துணர்வு பெற வைத்தீர்
கூட்டி கழித்துப் பார்த்தேன் - மனம்
பூட்டி வைக்காமல் சொல்லுகின்றேன் - மதி
தீட்டி மகிழ வைப்பது எழுத்துலக நட்புக்களே - அது
திகட்டி முடிவது அல்ல தமிழ் புகட்டி வளர்வதுவே
அகட்டி மனம் வைத்தேன் அலைகடல் சுருங்கியது-தீமை
கழட்டி எரித்திடவே எழுத்து நட்பு வாழ்த்தியது - தமிழ்
திரட்டி கவிகள் செய்வோம் - தமிழ் எதிர்க்கும் படை
விரட்டி எள்ளி நகை செய்வோம்.....அவர் இனி
சுருட்டி ஓடட்டும் நாம் சுந்தரத் தமிழ் செய்வோம்..
ஊட்டி விடுவோம் தென்றலுக்கும் தமிழ் சோறு
காட்டிக் கொடுப்போம் இனிமையை உலகுக்கு - இனி
மீட்டி இசைக்கட்டும் இதழெல்லாம் தமிழ் பேசி - தலை
ஆட்டி ரசித்திடும் தமிழ் மொழியில் பேசிடுவோம்.......!

குறிப்பு : இன்று எனது பிறந்த நாள்.( 3 .6 .2012 )
வாழ்த்திய எழுத்துலக தோழிகளுக்கும் / தோழர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள் - அன்புடன் ஹரி

அதனால்தான் கேக்கை வெட்டிக் கொண்டாட மனமில்லை
உங்கள் மனங்களை ஒட்டிக் கொண்டாட விரும்புகிறேன்
என எழுதி இருக்கிறேன் நண்பர்களே - நன்றி

என்றென்றும் நட்புடன் - உங்கள் ஹரி

எழுதியவர் : (2-Jun-12, 11:40 pm)
பார்வை : 851

மேலே