உன்னை மட்டும் நம்பு.....
கிழித்து வீசிய காகித துண்டாய்...
குப்பைக்கூடைக்குள் போன - என்
வாழ்க்கை எனும் புத்தகத்தை
மீண்டும் படித்து பார்க்கிறேன்....
பணம் எனும் வேசம் இன்மையால் -இந்த
வையக மேடையில் பாத்திரம் கிடைக்கல எனக்கு அன்று ....
நாடகம் ஆடும் உறவுகளுக்கு நடுவே
மிதிபட்டு போனது என் வாழ்க்கை புத்தகம்-என் மன
வேதனையே வேதனைபட்ட்து அன்று...
தீண்ட தகத்தவனாய் தூர வைக்கபட்டேன் ......
நண்பர்கள் கூட்டமும் எனக்கில்லை ....
நல்லறிவு சொல்லவும் யாருமில்லை....
கால் போன பாதையிலே - என்
வாழ்க்கையும் போனதே...
சாக்கடைக்குள் வீழ்ந்து - நரக
சகதியிலே நனைந்தேனே.......
கூடாத கூட்டமும்,சேராத நட்பும்
மாறான பாதைக்கு கொண்டு போனதே...
இன்று....
எனக்குள்ளே ஒளிந்திருந்த சிறு நம்பிக்கை...
உயரத்தில் வைத்தது என்னை...
என்னை மட்டும் நம்பினேன் ...
என்னை நானே உயரத்தில் வைத்தேன்...
அன்பு சோதரரே...
உங்களை மட்டும் நம்புங்கள் .....
நிட்சயம் உயர்வீர்கள்,,,,,,,