.கைம்பெண்

கணவன் எனும் சொல் கவிதையாய் தெரிந்தது கண்முன்னே அவளுக்கு,
பாசக் கயிறு எனும் நாசக் கயிறை வீசி வெறும் வேசமாக்கினான் அவள் கவிதையை,
கணவனுடன் கடந்த கடைசி நிமிடம் வரை கலைந்த கனவாகிப் போனது,
அழுத அவளுக்கு ஆறுதல் கூற ஆளில்லை இக்கூறுகெட்ட ஊரினில்,
ஆறுமாதம் கழித்து அவளை அணைக்க ஆளுண்டு இங்கே,
வெள்ளைப் புடவை உடுத்தாவிட்டால் விலை கொடுத்து வாங்காத
பட்டங்கள் பல உண்டு அவளுக்கு,
மனைவி இறந்தவுடன் கணவன் மணந்தால் அது மறுமணம்,
அதுவே இவள் மணந்தால் வார்த்தையாய் வந்து விழுபவை அனல் தெரிப்புகள்,
சுப காரியங்களுக்கு அழைப்பதில்லை பாவம் தன் கணவனும் ஒரு நாள்
இறப்பார் என்று அறியவில்லை அவர்கள்,
எதிரே வந்தால் எமன் வருவானாம் ஏமாளிகளின் எண்ணம்,
அன்பு கூடவும் செய்தது அனைவருக்கும் அவளின்
நிலையால் அல்ல நிறத்தால்,
பொட்டும் பூவும் வைத்தால் வெளிவரும்
ஒரே கேள்வி எங்கேப் போகிறாய்???
வேலைக்கு சென்றால் அவளை வேறு மாதிரியாக
பார்க்கும் பலப் பார்வகள்,
கல்லாய் இருக்கும் சிலையை கடவுளாய் மதிப்பவர்கள்,
பெண்ணாய் இருக்கும் இவளை கல்லாய்க் கூட மதிப்பதில்லை
என்ன உலகம் இது????

எழுதியவர் : த.பொன்மாரியப்பன் (4-Jun-12, 1:52 pm)
பார்வை : 187

மேலே