நாளை சமர்ப்பிக்கிறேன் உன்னிடம்

நம் காதலை பறிமறிக்கொண்ட பின் உன்னை காணும் நாள் என்று வரும்
எனத்தான் பரிதவித்திருந்த்தேன் பல நாட்களாய்,
வாழ்த்து அட்டைகளில் வந்து விழும் வார்த்தைகளும் உன் வண்ண
முகத்தை கண்ட பின்பு வரமறுக்கிறது,
தொலைவிலிருந்து தொலைபேசியில் கூறுகையில் தொய்வில்லாமல்
வீழ்ந்தது வாயிலிருந்த்து வார்த்தைகள்,
உன்னை நேரே கண்ட பின் ஊறவும் மறுக்கிறது உதடுகள்,
முத்தினை காதல் பரிசாகக் கொடுத்து கன்னங்களில் முத்தங்களை
பரிசாகக் கேட்கலாம் என்றிருந்தேன்,
எனக்கு எதிரியாக ஒருத்தியை அழைத்து வந்து ஏமாற்றினாய் அன்பே,
பல நாள் காதலுடன் என் காதலியை கண்டு பேசி பழக வந்தவனை
இப்படி பரிதவிக்க விட்டாய் பைங்கிளியே,
உன்னை எதிரே கண்ட அடுத்த நொடியில் ஏதேதோ செய்ய வேண்டுமென எண்ணம்
ஆனால் ஏளனம் நீ கொள்ள கூடாதென எண்ணி மீதம் வைத்தேன் அவைகளை,
உன் கைப்ப்ற்றி கைரேகைகளை அழித்துவிட வேண்டும் என்ற் நோக்கோடு
வந்தேன் ஆனால் நீயோ உன் தோழி கைப்பிடித்து வந்து
என் ஆசைகளை அழித்தாய் ஆருயிரே,
நீ தனியாக வந்திருந்தால் என் இனிமையான காதலை
இயல்பாக வெளிப்படுத்தியிருப்பேன் இன்றே இனியவளே,
வாழ்த்து அட்டை வழிய வழிய கொடுத்திருப்பேன்
என் காதலை நீ வந்திருந்தால் தனியே,
உன் கண்ணை பார்த்தவுடன் கண்டதும் தான் வந்து விழுகிறது வாயில்
உண்டானது வரமறுத்து உன்முன் ஊமையாக்குகிறது என்னை,
உண்மையாகச் சொல்கிறேன் நீ உன் தோழியில்லாமல் வந்திருந்தால்
உன் உதடுகளில் வியர்வை சுரக்க வைத்திருப்பேன் எனது கொண்டு,
இத்தனை நாளாய் பூட்டி வைத்திருந்த உணர்வுகளை உணர்த்தியிருப்பேன்
நீ உன் உண்மை தோழியை வீட்டினில் உட்காரவைத்து வந்திருந்தால்,
உன்னை கண்டதும் நீ என் காதல் கனியை உண்டதும் கட்டியணைக்க
வேண்டும் என்ற கனவுகளோடு வந்தேன், ஆனால் நீ என்னை
கயவனாக எண்ணிவிட கூடாதென அதற்கு கவட்டைப் போட்டு தடுத்தேன்,
இந்த அழகான சூழலில் உன்னை அள்ளி அணைத்திருப்பேன்
அவளை அழைத்து வராதிருந்தால் அன்பே,
நாளை உந்தன் தோழி இல்லாது வா அன்பே
உன்னை தோளில் சுமந்து என்னை சமர்ப்பிக்கிறேன் உன்னிடம்.

எழுதியவர் : த.பொன்மாரியப்பன். (6-Jun-12, 4:38 pm)
பார்வை : 197

மேலே