உன்னை காணும் நாள் என்று வரும்
இரு விழிகளின் தொலைவினில் நாம் இருக்கையில் நம் மனதுகள் தொடு வானத்தின் தொலைவில்,
இருவர் மனதும் இமைக்கும் விழிக்கும் உள்ள தொலைவில் இருக்கையில் இருவரும்
இம்மைக்கும் மறுமைக்கும் உள்ள தொலைவில்,
உன் குரலை கேட்கவே என் குழியுடைய செவிகள் செத்துகிடக்கின்றன,
அனுதினமும் உன் குவியுதடுகளிலிருந்து குயில் வார்த்தைகளை கேட்டால் தான்
என் குரவலையில் கூழும் இற்ங்குகிறது,
உன் தலையிலிருந்து உதிர்ந்த முடியே காரணமடி நான் இங்கே வாழ முயற்சி செய்வதற்கு,
நீ கொடுத்த பரிசுகளை கொண்டே பல நூற்றாண்டு வாழலமடி இருந்தும் உன் பற்களின்
பளீர் வெண்மையை காணவே என் வெண் கண் படபடக்கிறது,
உன் முகத்தில் உள்ள பூனை முடிகளே போதும் நான் புலவனானதிற்கு காரணமறிய,
பூக்களில் தான் பார்க்கிறேன் அப்பூனை முடிகளை,
என் புன்னகை அரசியை காண்பது எப்போது,
உன் விரல் பிடித்து விரல் நுனிகளை மெதுவாக கிள்ளுவது எப்போது,
என் மதியின் மடியில் தலை சாய்த்து தமிழில் பேசும் தருணம் எப்போது அமையுமென ஏங்குகிறேன்,
மழைச்சாரலின் இசைக்கு மரக்கிளைகள் இடையொடிய ஆடுகையில்
இலைகளின் நடுவே கசியும் நிலவொளியை போல் என் கண்களில் இருந்து காதல்
கசிகிறது உன்னை நினைக்கும் போதெல்லாம்,
பனிதுளியில் குளிக்கும் புற்களைப் போல் என் மனமும் குளிக்கிறது காதல் எனும் பெருமழையில்,
சூரிய கதிர்கள் பட்டவுடன் நீலவானம் நிறமறுவதைப்போல உன் கண்களில் இருந்து
வெளிப்பட்ட காதல் கதிர்கள் என்னை காதலனாக்கியது,
அக்கதிர் கண்களை காணும் நாள் என்று வருமோ,
பசுமை பயிர்களும் பாலை நிலமாகவே தெரிகிறது பாவை நீ அல்லாததால்,
உன்னுடன் உற்வாடவே நான் என் உயிரில் கலந்தேன் காதலை
எந்தன் இறகொடித்து சிறையில் அடைக்கிறது நான் வாழும் சூழல்,
நிலவினில் உன் முகத்தை பதித்து அனுப்பு இரவிலாவது உன் இனிய முகத்தை பார்க்கிறேன்,
காற்றிலாவது உன் வாசத்தை சேர்த்து என் விலாசத்தை கொடுத்தனுப்பு
அதை என் சுவாசக்காற்றாக நான் சேர்க்கிறேன் என் அன்பே,
உன்னை சேரும் நாளுக்காக காத்திருக்கிறேன் நான்,
உன்னுடன் கழித்த காலங்களை கனவுகளோடு சேர்த்துக்கொண்டு.