விரும்புகிறேன் உன்னை
உன்னை தேடியே நாளும் அலைகிறேன் உயிரை சேரவே தேகம் தேய்கிறேன்,
தமிழ் மொழியில் தவழுகிறேன் தலைவி உனை தினம் தழுவ,
மேக கூட்டங்களை மேனியில் பொழிய ஏவுகிறேன் நாளும்,
உன் பாதத்தினை கழுவ படைக்கிறேன் அமுதை,
பகலிலும் ஒளி கொடுக்க நிறுத்துகிறேன் நிலவதனை,
பகலவனும் பனி பொழிய பாவை உன்னை கெஞ்சுகிறேன்,
பறவைகள் உன்னில் சிறை சேர கொஞ்சுகின்றன என்னை,
செதில் சுவாசிகளை நீரினிலிருந்து பிரிக்கிறேன் என் காதலை உன் செவியுலுரைக்க,
பொன் வண்டுகளைக் கொண்டு உன்னை பொதி சுமக்க வைக்கிறேன்,
கவிதைகளை தினம் எழுத கனி உனை பார்த்திருக்கிறேன்,
என் கண்மணியை உன் கொலுசொலியில் சேர்த்திருக்கிறேன்,
நாற்கால்களில் தவழ்ந்தாவது நறுமுகை உனை நகைக்க வைப்பேன்,
அழகிய தவறாம் காதலை தினம் செய்ய விரும்புகிறேன் அன்பே,

