சாதி

மனதால் ஒன்று சேர்ந்தோரை வாழ்வினில் ஒன்றாக சேரவிடாமல்
மனிதன் போட்டுக் கொண்ட வேலி இந்த சாதி,
வீதிக்கொன்றாய் வீற்றிருக்கும் இச்சாதி சங்கங்களின்
நோக்கம் ஒவ்வோரு தெருவையும் தனி நாடாக்குவதோ,
கல்வி கற்க வேண்டிய இடத்திலேயும் இந்த சாதி
சமச்சீரின்மை இது அந்தச் சாமிக்கும் அடுக்குமோ,
அமைதியாக வழிபட வேண்டிய ஆலயங்களின் அமைதியை
குலைக்கவே அனுமதிக்கப்பட்டதாய் இந்த சனியன் பிடித்த சாதி,
அறிக்கைகளாலேயே சாதியை ஒழிக்கும் இந்த அரசுகளின்
அமைச்சரவைகளும் சாதி சமச்சீராகத்தான் பிரிக்கப்படுகிறது,
சாதிகள் இல்லை என்ற் சாதிக்க நினைப்போனைததான்
சோதித்து சோர்வடையச் செய்கிற்து இச் சமூகம்,
தொழிலை அடிப்படையாக வைத்து செய்யப்பட்ட இச்செயலை
சிலர் தன் சுயலாபத்திற்காக் தோல்களை கொண்டு செய்கின்றனர்,
அவர்களின் தோல் உறியும் நாள் வரும்,
அன்று கல்லிலும் பால் வரும்.

எழுதியவர் : த.பொன்மாரியப்பன். (6-Jun-12, 4:48 pm)
சேர்த்தது : த.பொன்மாரியப்பன்
பார்வை : 206

மேலே