நம்பிக்கை

நல்லவை நாளை நடக்கும் என்ற நம்பிக்கையே இன்று நாட்டை நல்வழி நடத்துகிறது,
கடவுள் ஒரு நாள் கண் திறப்பார் என்ற நம்பிக்கையே வழிபட வைக்கிறது,
விதை ஒரு நாள் விளையும் என்ற நம்பிக்கையே வழிபடவைக்கிறது,
விருப்பம் ஒரு நாள் விண்னைத் தொடும் என்ற நம்பிக்கையே
முன்னேற முன் நிற்கிறது,
தனயன் தன்னைக் காப்பான் என்ற நம்பிக்கையே தந்தையை தாங்க வைக்கிறது,
நல் வாழ்க்கை நாளை பிறக்கும் என்ற நம்பிக்கையே வாழ்வை வளமாக்குகிறது,
தேகம் வளரும் என்ற நம்பிக்கையே உண்ணச் சொல்கிறது,
வார்த்தைகள் வரும் என்ற நம்பிக்கையே உதடுகளை பிரிக்கிறது,
நிலவு தோன்றூம் என்ற நம்பிக்கையிலேயே சூரியன் மறைகிறது,
பகலவன் தன்னை திரும்ப அழைப்பான் என்றே பனிப் பொழிகிறது,
நகம் நாளை வளரும் என்றே நாக்கை கடிக்கச் செய்கிறது,
கவிதைகள் கையில் வருமென்றே கவிஞனை கற்பனை காண வைக்கின்றது,
நீல வானம் தன்னைத் தாங்கும் என்ற எண்ணமே நிலவை தோன்றவைக்கிறது,
தன் நம்பிக்கை எனும் நம்பிக்கையே நம்மை தடுமாறாமல் தவழ வைக்கிறது,
நம்பிக்கை கொள் மனமே நாளிய பொழுது நம்முடையதுன்று,
நம்பிக்கை எனும் தேரினில் ஏறியமர்ந்தால் வெற்றி எனும் விடியல்
விண்ணைப் பிளக்கும்.

எழுதியவர் : த.பொன்மாரியப்பன். (6-Jun-12, 4:49 pm)
சேர்த்தது : த.பொன்மாரியப்பன்
Tanglish : nambikkai
பார்வை : 682

மேலே