வாலிபர்களுக்கு வழிவிடுங்கள்

வயோதிகர்களே! வயோதிகர்களே!
வழிவிடுங்கள் வழிவிடுங்கள்
வாலிபர்களுக்கு வழிவிடுங்கள்
எழுதப்போங்கள் உங்கள்
வாழ்க்கை அனுபவத்தை
நந்திபோல் நிற்காதீர்கள்
நாடு போகட்டும் முன்னோக்கி...

நிறைந்துக்கிடக்கும் உங்களால்
நாடாளுமன்றம்
முதியோர் இல்லம் போல்
மாறித்தான் போனதே!

பழையவை கழிதலும்
புதியவை புகுதலும்
இயற்கையின் நியதியல்லவா?

எழுச்சிகொண்டு வராதோ
இளைய சமுதாயம் இங்கு?
வளர்ச்சி கண்டு வாழாதோ
இந்திய சமுதாயம் இங்கு?

அறிவும் அனுபவமும
கலங்கரை விளக்காய்
இளைய சமுதாயத்துக்கு
இருக்கட்டும் என்றும்

வயோதிகர்களே! வயோதிகர்களே!
வழிவிடுங்கள் வழிவிடுங்கள்
வாலிபர்களுக்கு வழிவிடுங்கள்

(இல்லையேல் என்னோடு வாருங்கள்
இப்படி எதையாவது எழுதுவோம்)

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (6-Jun-12, 5:09 pm)
பார்வை : 211

மேலே