எதிர் வீட்டு பொண்ணு காயத்ரி

எதிர் வீட்டு பொண்ணு காயத்ரி. நாங்க ரெண்டு பேரும் ஒரே பள்ளிகூடத்துல L.K.G. படுச்சிக்கிட்டு இருந்தோம். காலையில ஒண்ணா கை கோர்த்துகிட்டு தான் பள்ளிகூடத்துக்கு போவோம், ஒண்ணாதான் விளையாடுவோம். அன்னைக்கு ஒருநாளு எங்க ரெண்டு பேருக்கும் போட்டா போட்டி நடந்தது. அதுல எனக்கு தான் வெற்றி. அதனால அன்னைக்கு முழுவதும் அவ அழுதுகிட்டு தூங்கவே இல்லையாம் அத்தை சொன்னாங்க. அதனால தான் என்னோட புத்தகத்தில இருந்து ரெண்டு பக்கத்த கிழிச்சு போட்டுட்டேன். அடுத்த நாளுல இருந்து ரெம்ப சந்தோசமா இருந்தா. ஆனா என்னைய பார்த்தா மட்டும் முறைச்சுகிட்டு போயிடுவா. என்ன தான் முறைச்சாலும் அவ மேல எனக்கு தனி பிரியம் உண்டு. இன்னைக்கு தாவணி போட்டுக்கிட்டு ஆளே மாறிட்டா. ஆனா அவளோட முறைப்பு மட்டும் மாறவே இல்ல. ஒரு நாள் அவ என்கிட்ட வந்து தனியா பேசனுமுன்னு சொன்னா. அடுத்த நாள் நானும் அவளும் சந்திச்ச போது எதுவுமே பேசாம நின்னா. கொஞ்ச நேரமானதும் உள்ளங்கையில மறைச்சு வச்சிருந்த ரெண்டு காகிதத்த காமிச்சா. நான் என் புத்தகத்துல இருந்து கிழிச்ச அந்த ரெண்டு பக்கம் தான் அது. அதுக்கு அப்புறம் அவ சொல்ல வந்தத நான் புரிஞ்சுகிட்டேன். காலச்சக்கரம் ரெம்ப வேகமா சுத்திச்சு. எங்களுக்கு திருமணமும் நடந்தது. எங்க குடும்பம் அன்பானது மட்டும் அல்ல அளவானதும் கூட. எங்களுக்கு ஒரே ஒரு பையன் தான். நாங்க படிச்ச அதே பள்ளிகூடத்துல L.K.G படிச்சிகிட்டு இருந்தான். ஒரு நாள் சாயங்காலம் பள்ளிகூடத்துல இருந்து வந்ததும் ஒண்ணுமே சாப்பிடாம பேசாம இருந்தான். என்னனு கேட்டதுக்கு அவனோட girl friend கூட சண்டையாம். எங்க பையன் தானே அது தான் குணமும் எங்கள மாதிரியே இருந்தது. இந்த முறை காலச்சக்கரம் இன்னும் வேகமாவே சுத்திச்சு. எங்களோட நடையும் தளர்ந்தது, நரையும் வந்தது. ரெம்ப நாளுக்கு அப்புறமா மீண்டும் காயத்ரி ஒரு புத்தகத்த கொண்டு வந்தா. மறுபடியும் போட்டா போட்டி தான். ஆனா எந்த பக்கத்தையும் கிழிக்க கூடாதுன்னு நிபந்தனையோட தான்.

அன்புடன் Mr. காயத்ரி

எழுதியவர் : க(வி)நேசன் (28-Sep-10, 10:27 pm)
பார்வை : 3432

மேலே